'இன்னொரு முறை இது நடந்தால் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும்' - ஷேன்...
ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை சரிவு
முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டாா்சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியாவின் உள்நாட்டு மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 7 சதவீதம் சரிந்துள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 3,83,918-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் 4,13,967 வாகனங்களை உள்நாட்டு சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது. 2024 பிப்ரவரியில் 44,744-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி இந்த பிப்ரவரியில் 38,531-ஆகச் சரிந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 4,58,711-லிருந்து 4,22,449-ஆக்க குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.