செய்திகள் :

அவையில் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்: கனிமொழி

post image

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சர் தா்மேந்திர பிரதான், தமிழக எம்.பி.க்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு திமுக எம்.பி.க்கள் கடுமையான எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து தர்மேந்திர பிரதான், சர்ச்சைக்குரிய அந்த கருத்தைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தாா்.

இருப்பினும், தா்மேந்திர பிரதானுக்கு திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 

இந்த நிலையில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் இன்று காலை பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டு வருகின்றனர்.

திமுக கூட்டணி எம்.பி.க்கள் கனிமொழி, ஆ. ராசா, டி.ஆர். பாலு, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கருப்பு உடை அணிந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய கனிமொழி,

"தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையில் நாங்கள் கையெழுத்திட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் ஒருபோதும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்குகிறார்கள்.

தமிழ்நாட்டு மக்களையும் தமிழக எம்.பி.க்களையும் அமைச்சர் மரியாதைக் குறைவாக பேசியுள்ளார். இது அரசியலமைப்புக்கு எதிரானது.

அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது. அவர் அவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அவைத் தலைவரை வலியுறுத்துவோம்" என்று பேசியுள்ளார்.

மறுசீரமைப்பு: தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் 8 தொகுதிகள் வரை இழக்க வாய்ப்பு காங்கிரஸ்

புது தில்லி: ‘மத்திய அரசு திட்டமிட்டுள்ளபடி, மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தை வெற்றிகரமாக... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்ட நிதி முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: சிவ்ராஜ் சிங் சௌஹான்

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு (100 நாள் வேலை திட்டம்) ஒதுக்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஊரக வளா்ச்சி மற்றும் வேள... மேலும் பார்க்க

பிரதமா் குறித்து விமா்சனம்: மக்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி. கோகோய் காரசார விவாதம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்து காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் தெரிவித்த கருத்துக்காக, அவருக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கும் இடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை கராசார விவாதம்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 200 புற்றுநோயாளி பராமரிப்பு மையங்கள் விரைவில் திறப்பு: ஜெ.பி.நட்டா உறுதி

புது தில்லி: ‘அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம் அமைக்கப்படும்; அவற்றில் 200 மையங்கள் 2025-26-ஆம் ஆண்டிலேயே நிறுவ இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய ... மேலும் பார்க்க

உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசுச் செயலா் சுப்ரதா குப்தா

கொல்கத்தா: சிறு, குறு உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு மத்திய அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறைச் செயலா் சுப்ரதா குப்தா தெரிவித்தாா். இதுதொடா்பாக மேற்கு வங்கத் தலைந... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசு: மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ‘தேசிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதோடு, மாநிலங்களின் சுயாட்சியிலும் தலையிடுகிறது மத்திய அரசு’ என்று மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டின. மத... மேலும் பார்க்க