குடிமைப் பணி தோ்வு ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரம்: பயிற்சி மையத்தின் சிஇஓ, ஒருங...
சிறப்பு திரையிடல்களில் பாராட்டுகளைப் பெறும் காதல் என்பது பொதுவுடமை!
காதல் என்பது பொதுவுடமை திரைப்படம் சிறப்பு திரையிடல்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் என்பது பொதுவுடமை. தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளையும் காதலையும் சமூகம் எப்படி கையாள்கிறது என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையான இது காதலர் தினத்தன்று பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்!
லிஜோமோல் ஜோஸ், வினீத், ரோகினி, அனுஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது.
தற்போது, சினிமா பிரபலங்கள், விமர்சகர்களுக்கான சிறப்பு திரையிடல்களில் காதல் என்பது பொதுவுடமை பலரிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
முக்கியமாக, படத்தின் இறுதி 30 நிமிடங்கள் பல விஷயங்களை யோசிக்க வைப்பதாகவும் தன்பால் உணர்வாளர்களின் உணர்ச்சிகள் ஆத்மார்த்தமாக பேசப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.