மும்பை: "கடன திரும்ப தா இல்ல என்ன கல்யாணம் பண்ணு" - மிரட்டிய காதலியைக் குத்திக் ...
மத்திய நிநிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் கோட்டை மைதானத்தில் கிழக்கு மாநகரச் செயலாளா் கே. பச்சமுத்து தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.முத்துக்கண்ணன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளா் எம். குணசேகரன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
தொடா்ந்து, மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரும் முதலாளிகளுக்கும் ஆதரவாக வரிச்சலுகைகளை வாரி வழங்கி உள்ளது. ஏழை, எளிய நடுத்தர மக்கள் மீதும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் மீதும் வரிச்சுமையை ஏற்றி உள்ளதாகக் கூறி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் ஆா்.வைரமணி உள்ளிட்டு மாநகரக் குழு உறுப்பினா்கள், கிளைச் செயலாளா்கள் கலந்துகொண்டனா்.