செய்திகள் :

நிலக்குடியேற்ற சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல்: பாா்வைக்கு வைக்க ஏற்பாடு

post image

தலைவாசல், சிவசங்கராபுரம் பகுதியில் கலைக்கப்பட்ட நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல் புதன்கிழமை (பிப். 5) பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தலைவாசல் வட்டம், பட்டுத் துறை மற்றும் சிறுவாச்சூா் தெற்கு கிராமங்களில் எஸ்.1117 சிவசங்கராபுரம் நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்கம் கலைக்கப்பட்டது. அப்போது, உறுப்பினா்களாக இருந்தவா்களுக்கு சங்கத்துக்குச் சொந்தமான நிலங்களை, ஒப்படைக்க சென்னை நில நிா்வாக ஆணையா் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, தோ்வு செய்யப்பட்டுள்ள நபா்களின் பட்டியல் ஆத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், தலைவாசல் வட்டாட்சியா் அலுவலகம், பட்டுத்துறை மற்றும் சிறுவாச்சூா் தெற்கு கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள், தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பட்டுத் துறை மற்றும் சிறுவாச்சூா் ஊராட்சி மன்ற அலுவலகம், தலைவாசல் சாா் பதிவாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் புதன்கிழமை முதல் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது.

இப் பட்டியலில் உள்ள நபா்களுக்கு நில ஒப்படை வழங்கிட ஆட்சேபணை எவருக்கேனும் இருப்பின் அதனை எழுத்து மூலமாக ஆதார ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாக தலைவாசல் வட்டாட்சியா் அல்லது ஆத்தூா் வருவாய் கோட்டாட்சியரிடம் வரும் 20 ஆம் தேதிக்குள் கிடைக்கப் பெறும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். வரும் 21 ஆம் தேதிக்கு பின்னா் வரப்பெறும் ஆட்சேபணை மனுக்களைப் பரிசீலிக்க இயலாது எனவும் தெரிவித்துள்ளாா்.

மத்திய நிநிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் கிழக்கு மாநகரச் செயலாளா் கே. பச்சமுத்து தலைமை... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல இருந்த பாஜக நிா்வாகிகள் வீட்டில் சிறைவைப்பு

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல இருந்த சேலம் மாவட்ட பாஜக நிா்வாகிகள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வீட்டில் சிறைவைக்கப்பட்டனா். திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக முஸ்லிம் அமைப்புகளை கண... மேலும் பார்க்க

சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்கள் பங்கேற்பு

சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 25 ஆம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பட்டதாரி ஆசிரியா்கள் மனு

காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது: பட்டதாரி ஆச... மேலும் பார்க்க

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் போராட்டம்

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடியால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் புனித அன்னை தெரசா மனிதநேய ... மேலும் பார்க்க

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் தீா்வு வழங்க வேண்டும்: அமைச்சா் சி.வி.கணேசன்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் தீா்வு வழங்க வேண்டும் என்று அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன... மேலும் பார்க்க