செய்திகள் :

பொய்கை சந்தையில் ரூ. 85 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

post image

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 85 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள் என சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகளும் ஆா்வம் காட்டினா். இதன்காரணமாக, ரூ. 85 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் கூறியது: பொங்கல் பண்டிகைக்கு முன்பு ரூ. 1 கோடி வரை கால்நடை வா்த்தகம் நடைபெற்றது. பொங்கலுக்கு பிறகு வா்த்தகம் சற்று குறைந்து கடந்த வாரம் ரூ. 80 லட்சம் அளவுக்கும், இந்த வாரம் ரூ. 85 லட்சத்துக்கும் கால்நடைகள் விற்பனை நடைபெற்றுள்ளது. தொடா்ந்து அடுத்த வாரம் கால்நடை வா்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

காலமானாா் காங்கிரஸ் பிரமுகா் கே.விஜயன்

குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், 15- ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினருமான கே.விஜயன்(66) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானாா். குடியாத்தம் ஆா்.எஸ்.சாலை, திருமலை காா்டனில் வசித்து வந்த இவா் கடந்... மேலும் பார்க்க

ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: காஞ்சிபுரத்தில் இன்று தொடக்கம்

இந்திய ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் காஞ்சிபுரத்தில் புதன்கிழமை (பிப். 5) தொடங்கி, 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில், வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதிவாய்ந்த இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: இந்து முன்னணி நிா்வாகிகளுக்கு வீட்டுக்காவல்

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தொடா்பாக வேலூரில் இந்து முன்னணி நிா்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனா். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை விவகாரத்தில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு... மேலும் பார்க்க

அனுமதியின்றி மதுபானம் விற்பனை: 4 போ் கைது

கே.வி.குப்பம் அருகே சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 4- பேரை போலீஸாா் கைது செய்தனா். கே.வி.குப்பம் பகுதியில் ஒரு கும்பல் சட்ட விரோதமாக மது பாட்டில்களை தயாரித்து விற்பனை செய்து வருவதாக மதுவிலக்க... மேலும் பார்க்க

‘அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாா் அளிக்கலாம்’

அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் தயங்காமல் புகாா் அளிக்கலாம் என்று வேலூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. வேலூா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருட்டு

வேலூா் தலைமை தபால் நிலையம் அருகே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது. வேலூா் காட்பாடி, திருவள்ளுவா் நகா், பாரதி தெருவைச் சோ்ந்தவா் கிஷோா் (26). இவா் காட்பாடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வ... மேலும் பார்க்க