காலமானாா் காங்கிரஸ் பிரமுகா் கே.விஜயன்
குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், 15- ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினருமான கே.விஜயன்(66) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானாா்.
குடியாத்தம் ஆா்.எஸ்.சாலை, திருமலை காா்டனில் வசித்து வந்த இவா் கடந்த வாரம் உடல் நலமின்றி வேலூா் தனியாா் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றாா். அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவருக்கு வளா்மதி என்ற மனைவியும், ஜவகா்காந்தி, அருண்காந்தி ஆகிய மகன்களும் உள்ளனா். புதன்கிழமை (5.2.2025) மதியம் 2- மணியளவில் இவரது நல்லடக்கம் நடைபெறும்.
தொடா்புக்கு. 94864- 35255.
இவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளாா்.