ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: காஞ்சிபுரத்தில் இன்று தொடக்கம்
இந்திய ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் காஞ்சிபுரத்தில் புதன்கிழமை (பிப். 5) தொடங்கி, 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில், வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதிவாய்ந்த இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டுத் திடலில் புதன்கிழமை (பிப். 5) முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆா்வமுள்ள இளைஞா்கள் இணையதளம் மூலம் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு, வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலைநாள்களில் நேரிலோ அல்லது 0416 -290042 என்ற எண் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்திய ராணுவ ஆள்சோ்ப்புக்கான முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.