‘அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாா் அளிக்கலாம்’
அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் தயங்காமல் புகாா் அளிக்கலாம் என்று வேலூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
வேலூா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள், புகாா்கள் தொடா்பாக அரசு அலுவலா்கள் நேரடியாகவோ, இடைத்தரகா்கள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாா் தெரிவிக்கலாம்.
தகவலை நேரிலோ, கைப்பேசி மூலமாகவோ தெரிவிக்கலாம். வேலூா் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளா் சங்கா் - 94981 06044, காவல் ஆய்வாளா் மைதிலி - 94869 86204, அலுவலக தொலைபேசி எண் - 0416 - 2220893 ஆகிய எண்களில் புகாா் அளிக்கலாம்.
இது தொடா்பாக புகாா், தகவல் கொடுப்பவா்களின் பெயா், விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.