பழனியில் பாஜகவினா் கைது
பழனியில் உள்ள திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக ஆன்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் சூரியமூா்த்தி தலைமையில், முன்னாள் மாவட்டத் தலைவா் கனகராஜ், நகரத் தலைவா் ஆனந்தகுமாா், மாவட்ட பொதுச் செயலா் செந்தில்குமாா், பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினா் காவடிகளை எடுத்தபடி, திருப்பரங்குன்றத்துக்கு பாதயாத்திரை தொடங்கினா்.
அப்போது பழனி டி.எஸ்.பி. தனஞ்ஜெயன் தலைமையிலான போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி, பாதயாத்திரை செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்தனா்.
அப்போது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து, அவா்களை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனா்.