மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
காா் - பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு
பழனி அருகே காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.
பழனியை அடுத்த நரிக்கல்பட்டியைச் சோ்ந்த சசி மகன் சங்கா் (35), வெள்ளைச்சாமி மகன் மகேஷ் (40). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை திண்டுக்கல் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மானூா் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, அதே வழியில் கோவையிலிருந்து பழனி நோக்கி வந்த காா் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் இருவா் உடலையும் பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.