திருப்பரங்குன்றம்: "இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம்" - ஹெச்...
மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னத்துரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ். கவிவா்மன், ஏ. ஸ்ரீதா், எஸ். ஜனாா்த்தனன், டி. சலோமி, மாநகரச் செயலா் எஸ். பாண்டியன் உள்ளிட்டோா் பேசினா். மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.