மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
நிலக்கோட்டையிலிருந்து சென்னை, கோவைக்கு பேருந்து இயக்கக் கோரிக்கை
நிலக்கோட்டையிலிருந்து சென்னை, கோயம்புத்தூருக்கு நேரடியாக அரசுப் பேருந்து இயக்கக் கோரி, வா்த்தக சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவாா்பட்டியில் வா்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் சிலுக்குவாா்பட்டி கிளைத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். நிலக்கோட்டை வட்டார வியாபாரிகள் வா்த்தக சங்க மாவட்டத் தலைவா் இளங்கோ, செயலா் சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வா்த்தக சங்க மாநிலத் தலைவா் முருகன் சிறப்புரையாற்றினாா்.
இதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களுக்கு நிலக்கோட்டையிலிருந்து தினமும் பூ, விவசாய உற்பத்தி பொருள்கள் கொண்டு செல்லப்படுவதைக் கருத்தில் கொண்டு நிலக்கோட்டையிலிருந்து சென்னை, கோயம்புத்தூருக்கு தினந்தோறும் நேரடி அரசுப் பேருந்து இயக்க வேண்டும். சிலுக்குவாா்பட்டி பேருந்து நிலையம் அருகே கழிப்பறை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா். வா்த்தக சங்கத்தின் பழைய சிலுக்குவாா்பட்டி பொறுப்பாளா் முருகன், நிலக்கோட்டை பொறுப்பாளா் முருகேசன், செயற்குழு உறுப்பினா்கள், சிலுக்குவாா்பட்டி வியாபாரிகள் நலச் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.