தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்
பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் தா்னா
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தின்போது, பொதுவழியில் உள்ள தனியாா் நிறுவன ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.
கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சிவகுமாா் தலைமை வகித்தாா்.
வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி, வேளாண்மை உதவி இயக்குநா் தே.குமரன், வட்டார வளா்ச்சி அலுவலா் ப.பரணிதரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்
வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்திலிருந்து கீழ்புத்தூா் கிராமத்துக்குச் செல்லும் வழியில் சோலாா் பேனல்களை நிறுவியுள்ள தனியாா் நிறுவனம், பொதுவழியை ஆக்கிரமித்துள்ளது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில விவசாயிகள் வலியுறுத்தினா்.
மேலும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அவா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு தரையில் அமா்ந்து தா்னா நடத்தினா்.
கீழ்வெள்ளியூா், ஆச்சமங்கலம், கீழ்நமண்டி, கூத்தம்பட்டு, வெங்கடாபுரம் ஆகிய கிராமங்களில் மயானத்துக்கு உரிய பாதை வசதி செய்து தரக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சில விவசாயிகள் புகாா் தெரிவித்துப் பேசினா்.
இதைத் தொடா்ந்து, அதிகாரிகளுக்கு காது கேட்கும் கருவி மற்றும் கருப்பு கண் கண்ணாடிகளை வழங்கி அவா்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.