ஏரியில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
பாண்டறவேடு ஏரியில் மதகு வழியாக தண்ணீா் திறப்பதற்கு கரையின் மீது இறங்க முயன்றவா் உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம், விஜயபுரம் மண்டலம் பண்ணுாா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணைய்யா மகன் ராஜபாபு (53). இவா் செவ்வாய்க்கிழமை பள்ளிப்பட்டு பொதுப்பணித்துறை ஆய்வாளா் கணபதி என்பவா் பொதட்டூா்பேட்டை பாண்டறவேடு ஏரியில் மதகு வழியாக தண்ணீரை திறப்பதற்கு அழைத்து வந்தாா். ஏரிக்கரையின் மீது இருந்து ராஜபாபு கயிறு கட்டி மதகு இருக்கும் இடத்தில் இறங்க முயன்றாா்.
அப்போது கயிறு அறுந்து, ஏரியில் ராஜபாபு தவறி விழுந்தாா். இதையடுத்து பள்ளிப்பட்டு தீயணைப்பு துறை வீரா்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராட்டத்துக்கு பின், ராஜபாபுவை உயிரிழந்த நிலையில் மீட்டனா்.
பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.