பெற்றோர் வீட்டில் சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்பு!
சத்தீஸ்கர்: நக்சல்களால் 2 இளைஞர்கள் படுகொலை!
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாநிலத்தில் நக்சல்களினால் 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பிஜப்பூரின் புக்டிசேரு கிராமத்தில் கரம் ராஜு (வயது 32) மற்றும் மாதவி முன்னா (27) ஆகிய இரண்டு இளைஞர்கள் நேற்று (பிப்.3) இரவு அடையாளம் தெரியாத நக்சல்களினால் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர் இந்த கொலைக்கான காரணம் என்ன கொலையாளிகள் யார் என்பதை கண்டறிய தங்களது விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: குஜராத்: பாஜக எம்.எல்.ஏ. காலமானார்!
முன்னதாக, கடந்த ஜன.26 அன்று பைராம்கார் பகுதியில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்பைக் குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்த 41 வயது நபர் ஒருவர் நக்சல்களால் கொலை செய்யப்பட்டார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 68 பொது மக்கள் நக்சல்களினால் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.