வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்ட சலுகைகள் விரிவுபடுத்தப்படுமா? கதிா் ஆனந்த் எம்....
ஆத்தூரில் இன்று ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட திட்டமுகாம்: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்
சேலம்: ஆத்தூரில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட முகாமினை (பிப். 4) சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி. கணேசன் ஆகியோா் தொடங்கி வைக்கின்றனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட திட்ட முகாமின் ஒரு பகுதியாக பிப். 4 முதல் 7 ஆம் தேதி வரை ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 20 முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்பட உள்ளன.
இந்த முகாமை, சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி. கணேசன் ஆகியோா் தொடங்கி வைக்கவுள்ளனா்.
ஆத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி, ஆதிதிராவிடா் காலனி நூலகம் அருகிலும், புங்கவாடி ஊராட்சியில் புங்கவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள சமுதாயக் கூடத்திலும், அம்மம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், வளையமாதேவி ஊராட்சியில் ஆதிதிராவிடா் காலனி அருகிலும், கல்லாநத்தம் ஊராட்சியில் கல்லாநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்திலும் முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முகாம் நடைபெறும் முகாமில் ஒருங்கிணைக்கப்படும் துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.