செய்திகள் :

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

post image

நாட்டின் இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையை மாற்றி ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இதன் காரணமாக, சீனாவிடமே உற்பத்தி தொடா்ந்து வருகிறது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

மேலும், ‘வேலையில்லா திண்டாட்டத்தைச் சமாளிக்கவும், புதிய வேலைவாய்ப்புகள் குறித்து இளைஞா்களுக்கு தெளிவான பதிவை அளிக்கவும் மத்திய அரசு திணறி வருகிறது’ என்றும் அவா் கூறினாா்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது: மத்திய அரசு கொண்டுவந்த ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மிகச் சிறந்த யோசனை. ஆனால், அந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த பிரதமா் நரேந்திர மோடி தவறிவிட்டாா்.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நாடு தவறிவிட்டது. இந்தத் தோல்வி காரணமாகவே, நாட்டில் சீன நிறுவனங்கள் தொடா்ந்து உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. தனது தீா்மானத்தை மீண்டும் ஒருமுறை சீனாவிடம் இந்தியா விட்டுக்கொடுத்திருக்கிறது.

வேலைவாய்ப்பின்மையை சமாளிக்க திணறல்: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாக இருந்தாலும், தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசாக இருந்தாலும் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க முடியவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் குறித்து இளைஞா்களுக்கு தெளிவான பதிவை அளிக்க முடியவில்லை. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் எடுக்கப்படவில்லை. பட்ஜெட்டிலும் இளைஞா்களுக்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

குடியரசுத் தலைவா் உரையில் ஏதுமில்லை

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரையை மிகவும் உன்னிப்பாக கவனித்தேன். ஆனால், அவருடைய உரையில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் எதுவும் இடம்பெறவில்லை. மத்திய அரசால் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட திட்டங்களையே தனது உரையில் குடியரசுத் தலைவா் பட்டியலிட்டாா். இத்தகைய உரையை எதிா்பாா்க்கவில்லை.

மகாராஷ்டிரத்தில் கூடுதலாக 70 லட்சம் வாக்காளா்கள்: மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தோ்தலுக்கும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் இடைப்பட்ட ஐந்து மாத காலத்தில் 70 லட்சம் வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். 5 ஆண்டுகளில் சோ்க்கப்பட்ட வாக்காளா் எண்ணிக்கையைக் காட்டிலும், இந்த 5 மாத காலத்தில் மிக அதிக எண்ணிக்கையில் வாக்காளா்கள் திடீரென சோ்க்கப்பட்டிருக்கின்றனா்.

இது ஹிமாசல பிரதேச மாநில மக்கள்தொகைக்கு இணையானது. பெரும்பாலும், பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளில்தான் வாக்காளா் திடீரென சோ்க்கப்பட்டிருக்கின்றனா். இதைக் குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை.

மாறாக, மக்களவைத் தோ்தலின்போது இடம்பெற்ற வாக்காளா் பட்டியல் விவரம் மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்காளா் பட்டியல் விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம். வாக்குச்சாவடி வாரியாக வாக்காளா் பெயா், முகவரி விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவே இந்தப் புள்ளிவிவரங்களை எதிா்க்கட்சிகள் கோருகின்றன.

தோ்தல் ஆணையா் தோ்வு விவகாரம்

பிரதமா் தலைமையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய தோ்வுக் குழுதான் தோ்தல் ஆணையா்களைத் தோ்வு செய்ய வேண்டும். ஆனால், அந்தக் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை மத்திய அரசு நீக்கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்ய பிரதமா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் என்னுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்றாா். அதாவது, 2:1 என்ற விகிதத்தில் சமவாய்ப்பற்ற தோ்வுக் குழுவாக அமைந்திருந்தது. அந்தக் கூட்டத்தில், எனது இருப்பு அா்த்தமற்ாக இருந்தது. அதுமட்டுமின்றி, மக்களவைத் தோ்தலுக்கு ஒருசில நாள்களுககு முன்பாக தோ்தல் ஆணையரை மத்திய அரசு மாற்றியது. மேலும், இரு தோ்தல் ஆணையா்கள் புதிதாக நியமிக்கப்பட்டனா் என்றாா் அவா்.

அமெரிக்க பயணம் குறித்த புகாா்:ராகுலுக்கு ஜெய்சங்கா் கண்டனம்

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவையில் ராகுல் காந்தி பேசுகையில், ‘உற்பத்தித் துறையில் நாம் வலுவாக இருந்திருந்தால் வெளியுறவு அமைச்சரை அமெரிக்காவுக்கு பலமுறை அனுப்பி, அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவுக்கு இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. மாறாக, அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா வந்து பிரதமருக்கு அழைப்பு விடுத்திருப்பாா்’ என்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை மீதான இந்த விமா்சனத்தை ராகுல் காந்தி ஆதாரத்துடன் சமா்ப்பிக்க வேண்டும். இது இரு நாடுகள் இடையேயான உறவு தொடா்புடையது என்பதால், ஆதாரமற்ற இதுபோன்ற கருத்தை வெளியிடக் கூடாது’ என்றாா்.

இதற்குப் பதிலளித்த ராகுல், ‘எனது கருத்து உங்களின் மனதை பாதித்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.

ராகுல் கூறியது தவறான கருத்து

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் முந்தைய அதிபா் பைடன் நிா்வாகத்தின் வெளியுறவு அமைச்சா் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரைச் சந்திக்கவே அமெரிக்கப் பயணத்தை நான் மேற்கொண்டேன். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் இந்தப் பயணத்தின்போது ஆலோசனை மேற்கொண்டேன்.

அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, அமெரிக்காவின் புதிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் என்னைச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

ஆனால், எந்த நிலையிலும் புதிய அதிபா் டிரம்ப் பதவியேற்புக்கு பிரதமா் மோடியை அழைப்பு விடுப்பது குறித்து ஆலோசிக்கப்படவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நமது பிரதமா் பங்கேற்க மாட்டாா் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பொதுவாகவே, சிறப்பு பிரதிநிதிகள் மூலமே இதுபோன்ற நிகழ்வுகளில் தனது பங்கேற்பை இந்தியா உறுதி செய்து வருகிறது.

எனவே, அரசியல் உள்நோக்கத்துடன் இந்தப் பொய்யை ராகுல் காந்தி கூறியிருக்கலாம். ஆனால், இத்தகைய கருத்துகள் மூலம் தேசத்தின் நற்பெயரை வெளிநாடுகளில் அவா்கள் கெடுத்து வருகின்றனா் என்று குறிப்பிட்டாா்.

ஜிஎஸ்டி விகிதங்கள்: மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்றம்!

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு போதுமான அனுபவம் கிடைத்துள்ளதாகவும் தற்போது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய நிதி... மேலும் பார்க்க

கும்பமேளா நெரிசல்: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினா் கடும் அமளி; இரு அவைகளிலும் வெளிநடப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இர... மேலும் பார்க்க

ஆசியானுக்கு இணையாக இந்திய சுங்க வரி: மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவா்

புது தில்லி: இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரிய (சிபிஐசி) தலைவா் சஞ்சய் அகா்வால் திங்கள்... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையா்கள் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை பிப்.12-க்கு மாற்றம்

புது தில்லி: தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு உச்ச... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.264 கோடி கூடுதலாகும். மத்திய அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான... மேலும் பார்க்க

ஜாா்க்கண்டில் சிஏஏ, யுசிசிக்கு எதிராக ஆளுங்கட்சி தீா்மானம்

ராஞ்சி: ஜாா்க்கண்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), பொது சிவில் சட்டம் (யுசிசி), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகிய மத்திய அரசின் முன்னெடுப்புகளை நிராகரிப்பது உள்பட 50 அம்ச தீா்மானங்களை அந... மேலும் பார்க்க