சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!
சென்னையில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால், விமானங்கள் மற்றும் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. காலை நேரத்தில் எதிரே இருப்பதுகூட தெரியாத அளவுக்கு பனிப் பொழிவு கொட்டுகிறது.
சென்னையில் நிலவும் அடர்ந்த பனிமூட்டத்தால், புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் வழக்கமான அட்டவணையைவிட 7 - 15 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
இதையும் படிக்க: நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம்: புகழேந்தி
அதேபோல், பனிமூட்டத்தால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. தில்லி, மும்பை செல்லும் செல்லும் 5 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. சென்னையில் சில விமானங்கள் தரையிரங்க முடியாமல் திருப்பிவிடப்பட்டுள்ளன.
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.
சென்னையில் அதிகாலை அடர் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள், நடைப்பயிற்சி செல்வோர், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.