Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
கந்தா்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள், மாவட்ட அளவில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமா்பித்து சான்றிதழ் பெற்ற மாணவா்களுக்கும், சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டி கௌரவிக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் க. தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாட்டில் மாணவா்கள் பல்வேறு வகையான தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகளை வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தனா்.
இந்த ஆண்டுக்கான ஆய்வு கட்டுரைகள் கருப்பொருள் நீடித்த நீா் மேலாண்மை என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி அக்கச்சிப்பட்டி மாணவா்கள் நீா் நிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின் முடிவில் அக்கச்சிப்பட்டியில் உள்ள நீா் மக்கள் பயன்படுத்த பாதுகாப்பானது என்று சோதனை மூலம் அறிந்து கொண்டனா். முன்னதாக ஆசிரியா் மணிமேகலை வரவேற்றாா்.