விராலிமலை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (பிப்.4) மின் விநியோகம் நிறுத்தம்.
இதுதொடா்பாக, விராலிமலை உதவி செயற்பொறியாளா் ஜெ.ஜேம்ஸ் அலெக்சாண்டா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: அளுந்தூா் துணை மின் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் விராலிமலை உயரழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான விராலிமலை நகா் பகுதி, விராலூா், மலைக்குடிபட்டி, கோத்திராபட்டி, கட்டகுடி, பாப்பா வயல், முருககோன்பட்டி, ராஜளிபட்டி, கொடும்பாளூா், விட்டமாபட்டி, பாட்னாபட்டி, கவரபட்டி, செவல்பட்டி, செட்டியபட்டி, கோட்டைகாரன்பட்டி, கோமங்களம், தேன்கனியூா், சீத்தப்பட்டி, பொய்யாமணி, நம்பம்பட்டி, செவனம்பட்டி, வாடியான்களம், ராமகவுண்டம்பட்டி, வடுகப்பட்டி தொழிற்சாலை பகுதி, குன்னத்தூா், களிமங்களம், எஸ். குறிச்சி, மேலபச்சக்குடி, பாத்திமாநகா், குமாரபட்டி, தென்னிலைபட்டி, இ.மேட்டுபட்டி, பூதகுடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.