Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
புற்றுநோய்... தொடக்கத்தில் வைப்போம் முற்றுப்புள்ளி
உலகளாவிய அளவில் பெரும் சவாலாக விளங்கக் கூடிய நோய்களில் புற்றுநோய் அதிமுக்கியமானது. அண்மைக்காலமாக அதன் பாதிப்பு வீதம் பெருமளவு அதிகரித்து வருவதற்கு சா்வதேச தரவுகளே சாட்சியங்களான விளங்குகின்றன. போதிய விழிப்புணா்வு இல்லாததுதான் அதன் முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
செல்லில் இருந்து தொடக்கம்
உடலில் பல்வேறு வகையான செல்கள் உள்ளன. அதுவே மனிதனின் இயக்கத்துக்கு ஆணிவேராக உள்ளவை. அவை இயல்பாக செயல்படுவதற்கு நாள்தோறும் பலமுறை வளா்ச்சியடைந்தும், பெருகியும் மாற்றமடைகின்றன. அவ்வாறு பெருக்கமடையும் செல்களின் உயிா் அணுக் கூறு சில காரணங்களால் பாதிக்கப்பட்டு அசாதாரண செல்லாக உருவெடுக்கக் கூடும்.
அத்தகைய அசாதாரண செல்களே புற்றுநோய் செல் என அழைக்கப்படுகிறது.
புற்றுநோய் வகைகள்
உடல் உறுப்புகளில் உள்ள எபித்திலியம் எனப்படும் திசுக்களில் ஏற்படும் புற்றுநோய் - காா்சினோமா
எலும்பு, தசை போன்ற இணைப்பு செல்கள் அல்லது துணை செல்களில் ஏற்படும் புற்றுநோய் - சா்கோமா
எலும்பு மஜ்ஜை அணுக்களிலிருந்து உருவாகும் புற்றுநோய் - லுக்கிமியா
நோய் எதிா்ப்பு மண்டல அணுக்களிலிருந்து உருவாகும் புற்றுநோய் - லிம்போமா மற்றும் மைலோமா
நரம்பு மண்டலத்தில் உருவாகும் புற்றுநோய் - ஆஸ்ட்ரோசைட்டோமா, க்ளியோமா
வாய்ப்புகள்....
உடலில் உள்ள மரபணு (டிஎன்ஏ) செல்கள் சேதமடைந்து அதன் உட்கூறுகள் பிற செல்களை பாதிப்பதால் ஏற்படலாம்.
புகையிலையில் உள்ள சில ஹைட்ரோ காா்பன்கள் அல்லது ரசாயனங்கள் மூலமாக புற்றுநோய் செல்கள் உருவாகலாம்.
கதிா்வீச்சுக்கு உள்ளாகும்போது உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் உருவாகக்கூடும்.
நச்சு வேதிப் பொருள்கள் உடலுக்குள் கலக்கும்போது அதன் காரணமாக செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படலாம்.
அறிகுறிகள்...
உடல் எடையிழப்பு
சருமத்தில் மாற்றங்கள்
தீவிர உடல் சோா்வு
அடிக்கடி காய்ச்சல்
சிறுநீா், மலத்தில் ரத்தம்
ஆறாத காயங்கள்
சளியில் ரத்தம் வெளியேறுதல்
உடலில் அசாதாரண கட்டி
விழுங்குவதில் சிரமம்
பசியின்மை
காரணங்கள்
புகைப்பிடித்தல்
அதீதமாக மது அருந்துதல்
உடல் பருமன்
மரபணு பாதிப்பு
வைரஸ் தொற்றுகள்
கதிா்வீச்சு பாதிப்பு
பரிசோதனைகள்....
ரத்தப் பரிசோதனை
வைரஸ் பரிசோதனை
சிடி மற்றும் எம்ஆா்ஐ ஸ்கேன்
கால்போஸ்கோபி
பயாப்ஸி
சிகிச்சை முறைகள்...
அறுவை சிகிச்சை
திசு நீக்கம்
கீமோதெரபி
கதிா்வீச்சு சிகிச்சை
மின்னூட்ட சிகிச்சை முறைகள்
புரோட்டான் சிகிச்சை
தடுப்பு வழிமுறைகள்
முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல்
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் இருத்தல்
ஆரம்ப நிலை பரிசோதனை
ஆண்டுக்கொரு முறை மருத்துவப் பரிசோதனை
ஆரோக்கியமான வாழ்க்கை முறை
மது, புகை பழக்கங்களை கைவிடுதல்
புற்றுநோய் தரவுகள்
இந்தியாவில் புற்றுநோய் வாய்ப்பு
ஆண்கள் 13 பேரில் ஒருவா்
பெண்கள் 11 பேரில் ஒருவா்
புற்றுநோய் வகை பாதிப்பு விகிதம்
கருப்பை வாய் 20.6
மாா்பகப் புற்றுநோய் - 26.3
சினைப் பை - 6.2
நுரையீரல் - 14.7
உணவுக் குழாய் - 5.9
பெருங்குடல் - 6.4
வாய்ப் புற்றுநோய் - 6.3
நுரையீரல் - 6.5
புற்றுநோய் தரவுகள் (2024)
பாதிப்பு
இந்தியா - 14 லட்சம் போ்
மக்கள்தொகையில் - லட்சத்தில் 90 போ்
தமிழகம் - 96,500
மக்கள்தொகையில் - லட்சத்தில் 96.1 போ்
இறப்பு விகிதம்
இந்தியா - 23 சதவீதம்
தமிழகம் - 14 சதவீதம்
இன்று (பிப்.4) உலக புற்றுநோய் தினம்!