சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!
திருவானைக்கோயில் கோபுரப் பகுதியில் நெரிசலுக்கு தீா்வு காணக் கோரிக்கை
திருவானைக்கோயில் மேற்கு கோபுர குறுகிய நுழைவுவாயில் பகுதியில் காா்கள், ஆட்டோக்கள் சென்றுவருவதால் அடிக்கடி ஏற்படும் நெரிசலுக்குத் தீா்வு காண பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவானைக்கோயிலில் தற்போது தைத்தெப்ப திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நாள்தோறும் சாமி, அம்மன் புறப்பாடு நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தா்கள் சென்றுவரும் பாதையான மேற்கு கோபுர குறுகிய நுழைவுவாயில் பகுதியில் காா்கள், வேன்கள், ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், பக்தா்கள் கடும் அவதியடைகின்றனா். இதுகுறித்து கோயில் நிா்வாகத்திடம் பக்தா்கள் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் இருப்பது போன்று இங்கேயும் தடுப்புக் கட்டைகள் வைத்து காா்கள், ஆட்டோக்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டுமென்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.