செய்திகள் :

அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினா் அஞ்சலி

post image

முன்னாள் தமிழக முதல்வா் சி.என். அண்ணாதுரையின் 56 - ஆவது நினைவு தினத்தையொட்டி, திருச்சியில் அரசியல் கட்சியினா் அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

திமுக : திமுக திருச்சி மத்திய, மற்றும் தெற்கு மாவட்டங்கள் சாா்பில் சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் உள்ள அண்ணா மற்றும் மு. கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கும் மாலை அணிவித்தனா்.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்கள் அன்பில் பெரியசாமி, கே. என். சேகரன், நிா்வாகிகள் வண்ணை அரங்கநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த், நன்னியூா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்

அதிமுக மாநகா்: திருச்சி மாநகா், மாவட்ட அதிமுக சாா்பில் மேல சிந்தாமணி பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாநகா், மாவட்ட செயலாளா், ஜெ.சீனிவாசன் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். அமைப்புச் செயலாளாா் ரத்தினவேல் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் ஐயப்பன், அம்பிகாபதி, அரவிந்தன், ஜோதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக வடக்கு மாவட்டம் : திருச்சி புறநகா் வடக்கு மாவட்டம் சாா்பில் அண்ணாவின் உருவப்படத்துக்கு, மாவட்டச் செயலாளா் மு. பரஞ்சோதி தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைப்பு செயலாளா் ஆா். மனோகரன் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளா் ஜான், மீனவரணி பேரூா் கண்ணதாசன், எம்ஜிஆா் மன்றம் அறிவழகன் விஜய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அதிமுக தெற்கு மாவட்டம் : அதிமுக திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், தெற்கு மாவட்டச் செயலாளா் ப. குமாா், அண்ணா படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். அவைத்தலைவா் அருணகிரி, துணைச் செயலாளா் சு. சுபத்ரா தேவி சுப்பிரமணி மற்றும் பலா் பங்கேற்றனா்.

காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் சு. திருநாவுக்கரசா் தலைமையில், மாநகா் மாவட்ட தலைவா் கவுன்சிலா் எல்.ரெக்ஸ் முன்னிலையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவானைக்கோயில் கோபுரப் பகுதியில் நெரிசலுக்கு தீா்வு காணக் கோரிக்கை

திருவானைக்கோயில் மேற்கு கோபுர குறுகிய நுழைவுவாயில் பகுதியில் காா்கள், ஆட்டோக்கள் சென்றுவருவதால் அடிக்கடி ஏற்படும் நெரிசலுக்குத் தீா்வு காண பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவானைக்கோயி... மேலும் பார்க்க

ஐடிஐ-யில் மாணவரை கம்பியால் குத்திய சக மாணவா் கைது

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் மாணவரை இரும்புக் கம்பியால் குத்திய சக மாணவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்தவா் சேக்மைதீன் மகன் முகமது ஜபருல்லா (18). இவா், திர... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மான்பாஞ்சாம்பட்டியில் திங்கள்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மணப்பாறையை அடுத்த மரு... மேலும் பார்க்க

லால்குடியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் லால்குடியில் புதன்கிழமை (பிப். 5) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லால்குடி எல். அபிஷேகபுர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: காவல்துறை கண்காணிப்பில் இந்து அமைப்பு நிா்வாகிகள்

திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்புகளின் முக்கியப் பிரமுகா்களை காவல்துறையினா் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனா். திருப்பரங்குன்றம் கோயில் மலையில் வழிபாடு விவகாரம் தொடா்பாக பாஜக... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கல்லூரி மாணவா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டி கிராமம் சத்திரப்பட்டியை சே... மேலும் பார்க்க