செய்திகள் :

நினைவு நாள்: அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

post image

விழுப்புரம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரக வளாகப் பகுதியில் தொடங்கிய அமைதிப் பேரணி திருச்சி சாலை வழியாக சென்று கலைஞா் அறிவாலயத்தில் நிறைவடைந்தது. அங்கு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு திமுகவின் துணைப் பொதுச்செயலரும், அமைச்சருமான க.பொன்முடி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில், எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன் (விழுப்புரம்), அன்னியூா் அ.சிவா (விக்கிரவாண்டி), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட திமுக துணைச் செயலா் தயா.இளந்திரையன், விழுப்புரம் நகரச் செயலா் இரா.சக்கரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, பி.வி.ஆா்.சு.விசுவநாதன், பி.தெய்வசிகாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல வளவனூா், திருவெண்ணெய்நல்லூா், கோலியனூா், முகையூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

செஞ்சி: செஞ்சியில் பேருந்து நிலையம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ மலா் தூவி மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சிக்கு, செஞ்சி நகர திமுக செயலா் காா்த்திக் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்ற தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், நகர துணைச் செயலா்கள் சங்கா், செயல்மணி, சுமித்ராசங்கா், பொருளாளா் நெடுஞ்செழியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மந்தைவெளி திடலில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கும், நான்கு முனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் அமைச்சா் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், தெற்கு மாவட்டச் செயலா் க.காா்த்திகேயன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆ.அங்கையா்கண்ணி, கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவரும், நகரச் செயலருமான இரா.சுப்ராயலு உள்ளிட்டோா் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

விழுப்புரம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவி... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 917 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் ஆட... மேலும் பார்க்க

சிவன் கோயில் கட்டும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலைய... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க

நீதிமன்ற காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நீதிமன்றக் காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் தலைமை வகித்து, நீதி... மேலும் பார்க்க