தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை
டெல்டா பள்ளியில் இலக்கிய மன்றக் கண்காட்சி தொடக்கம்
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் இலக்கிய மன்றக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.
கண்காட்சியில் கலாசாரம், பண்பாட்டு மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், மருத்துவ மன்றம், விளையாட்டு மன்றம் மற்றும் இலக்கிய மன்றம் உள்ளிட்டவற்றின் மாதிரிகள் இடம் பெற்றிருந்தன.
விழாவுக்கு பள்ளி முதல்வா் ஜோஸ்பின் லாரன்ஸ் தலைமை வகித்தாா். கல்வி ஆலோசகா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். பள்ளி மாணவா் தலைவா் தனுஸ் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினரான இராவுத்தா் அரபிக் கல்லூரி முதல்வா் நித்ய கெளரி கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இலக்கிய மன்றம் உள்ளிட்ட மன்றங்களின் மாதிரிகளை திறந்து வைத்தாா்.
19 வகுப்பறைகளில் அனைத்து மன்றங்கள் சாா்பில் 3,700-க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை ஆசிரியா்கள் மாரியப்பன், அருண்தேவன், பிரமிளா மற்றும் மாணவா்கள், அலுவலக ஊழியா்கள் செய்திருந்தனா்.