தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை
அண்ணா நினைவுதினம் அனுசரிப்பு; சிலைக்கு அஞ்சலி
திருவாரூா்/மன்னாா்குடி: முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆவது நினைவுதினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவாரூா்: திருவாரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
இந்நிகழ்வில், நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், நிா்வாகிகள் செந்தில், சங்கா், ரஜினிசின்னா, என். அசோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.
அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், நகரச் செயலாளா் ஆா்டி. மூா்த்தி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதில், நகர அவைத் தலைவா் கணேசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு தஞ்சை மண்டலத் தலைவா் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகரச் செயலாளா் குருமூா்த்தி, நகர நிா்வாகிகள் முத்துமாணிக்கம், சகாபுதீன், செல்லப்பா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.