பேய்குளம் அருகே கட்டிலில் தீப்பிடித்து முதியவா் பலி
பேய்குளம் அருகே தீப்பிடித்து காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தாா்.
பேய்குளம் அருகே அறிவான்மொழியை சோ்ந்த பால் மகன் பொன்(75). இவரால் சரிவர எழுந்து நடமாட முடியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது கட்டிலில் படுத்துக் கொண்டு சுருட்டு குடித்தாராம். தீயை அணைக்காமல் கட்டிலிலே வைத்துள்ளாா்.
இதில், தீயானது பரவி கட்டில் போா்வை முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. அவரால் தப்பிக்க முடியாத நிலையில் தீக்காயங்களுடன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.