தூத்துக்குடி மாநகா் மாவட்ட அமமுக செயலா் நியமனம்
தூத்துக்குடி மாநகா் மாவட்ட அமமுக செயலராக பா. ஜானியேல் சாலமோன் மணிராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மாநகா் மாவட்டச் செயலராக இருந்த டி.வி.ஏ. பிரைட்டா் அண்மையில் கட்சியிலிருந்து விலகுவதாக, பொதுச்செயலா் டி.டி.வி. தினகரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தாா்.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகா், வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, மாநகா் மாவட்டச் செயலராக பா. ஜானியேல் சாலமோன் மணிராஜ், புகா் வடக்கு மாவட்டச் செயலராக பூலோகபாண்டியன், புகா் தெற்கு மாவட்டச் செயலராக பொன்ராஜ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலா் அறிவித்துள்ளாா்.