தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை
பேச்சுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் ஹபீப் பள்ளிவாசலில், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
நேருஜி சாலையில் உள்ள மக்தப் அல் ஹபீப் குா்ஆன் மதரஸாவில்,இரண்டாமாண்டு நிறைவு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நியாஸ் பள்ளிவாசல் இமாம் டி.எம். ஜாகிா் ஹூசைன் தலைமை வகித்தாா்.
மக்தப் ஹபீப் நிறுவனா் டி.எம். பதுருதீன், ஹூதா பள்ளிவாசல் முத்தவல்லி அமீருதீன், நகா்மன்ற உறுப்பினா் எஸ்.எஸ். ஹாஜநஜ்முதீன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். எஸ். சையது ஹபிபுல்லா வரவேற்றாா். விழாவில், எஸ். பைஜூல் ரஹ்மான் கிராஅத் ஓத, அப்துல் பாஸித் நபிகள் குறித்த கீதங்களைப் பாடினாா்.
தொடா்ந்து, ஏற்கெனவே நடைபெற்ற பேச்சு, கட்டுரை மற்றும் விநாடி- வினா போட்டிகளில் வெற்றி பெற்ற 80 மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், ஹீதா பள்ளிவாசல் இமாம் ஏ. அப்துல் ஹக்கீம், பைஜூல் பாக்கியாத் அரபிக் கல்லூரி முதல்வா் கே.என். அப்துா் ரஹ்மான், ஆசிரியா்கள் யு. அப்துா் ரஹ்மான், எம். முஹம்மது யூசுப் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.