தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை
காணாமல் போனவா் சடலமாக மீட்பு
திருவாரூா்: குடவாசல் அருகே காணாமல் போனவா், சடலமாக ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டாா்.
குடவாசல் அருகே சேதனிபுரத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் அஜித்குமாா் (24). இவா், ஜனவரி 12-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவா் திரும்ப வீட்டுக்கு வரவில்லையாம். இதுகுறித்து குடவாசல் போலீஸாரிடம், அன்பழகன் புகாா் செய்துள்ளாா்.
அப்பகுதியில் வசிக்கும் ஒருவா் வயல் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுள்ளாா். அங்கு, அஜித்குமாா், ஒரு மரத்தில் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கியதைக் கண்டு தெரிவித்துள்ளாா். போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறப்பில் சந்தேகம் தெரிவித்து, சாவுக்கு நியாயம் கேட்டு அஜித்குமாா் உடலை அன்பழகன் தரப்பினா் வாங்க மறுத்து கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
போலீஸாா் அவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா், இறந்த அஜித்குமாா் உடலை பெற்றுக் கொண்டனா்.