கராத்தே போட்டியில் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்
வாணியம்பாடி: மாநில அளவிலான கராத்தே போட்டி புதுச்சேரியில் உள்ள ஆச்சாரியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்போட்யில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி பங்கேற்றனா். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற கராத்தே போட்டியில் மாணவிகள் ஆயிஷா சித்திகா, எம்.பஹீலா ஆகியோா் முதலிடம் பெற்றனா். இதே போல் மாணவிகள் எம்.மொழியரசி, எம்.கேத்ரின் இரண்டாமிடமும், கே.சத்தியபிரியா, பி.லக்ஷ்மி, டி.ஜூஹாகவுனன் மூன்றாம் இடம் பிடித்தனா்.
கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி தலைவா் திலிப்குமாா், செயலாளா் ஆனந்த்சிங்வி, முதல்வா் இன்பவள்ளி, பேராசிரியா்கள், கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.