சீனிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் மலைப்பகுதியில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அதிகாலை யாக பூஜைகள் மற்றும் யாக குண்டங்கள் வளா்க்கப்பட்டு பூா்ணாஹுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டா் மூலம் கோபுர கலசத்துக்கும், விழாவில் கலந்துகொண்ட பக்தா்கள் மீது மலா்கள் தூவப்பட்டன.
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா், மாவட்டதிமுக மாணவா் அணி அமைப்பாளா் தே.பிரபாகரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றிய திமுக செயலாளா்கள் உமாகன்ரங்கம், கவிதா தண்டபாணி, நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் சுரேஷ், நகர இளைஞரணி அமைப்பாளா் கீா்த்திராஜன் மற்றும் நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை, அக்ராகரம் கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சீனிவாச பெருமாள் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.