மொபட்-காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வாணியம்பாடி: நாட்றம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் கிராமம் சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மொபட் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பையனப்பள்ளிகூட்ரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் உடையாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த குமாா்(55) என்பவா் மொபட்டில் சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த கா்நாடக மாநில பதிவு எண் கொண்ட காா் மோதியதில் நிகழ்விடத்திலேயே குமாா் உயிரிழந்தாா்.விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டுநா் சாலை ஓரம் நிறுத்தி விட்டு தலைமறைவானாா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று இறந்தவா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அப்போது கிராம மக்கள் பையனப்பள்ளி பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா், அப்போது போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். பின்னா் விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.