யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
ஒசூா்: ஒசூா் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.
ராயக்கோட்டை அருகே உள்ள பாவாடரப்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி சின்ன பையன் என்ற முனியப்பன் வழக்கும்போல திங்கள்கிழமை அதிகாலை தனது விவசாய நிலத்துக்குச் சென்றாா். அப்போது அங்கு நின்ற ஒற்றை யானை அவரைத் தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த முனியப்பனை அக்கம்பக்கத்தின் மீட்டு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும் அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ‘யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் வனத் துறையினா் அலட்சியம் காட்டுவதாகக் குற்றம் சாட்டினா்.