முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாள்: கட்சியினா், அமைப்புகள் அஞ்சலி
ராணிப்பேட்டை/வேலூா்/திருப்பத்தூா்: முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், நடைபெற்ற நிகழ்வில் கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து வாலாஜாபேட்டையில் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டாா். இதில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளா் ஆா்.வினோத் காந்தி, ஜி.கே.குழும இயக்குநா் சந்தோஷ் காந்தி, மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே. சுந்தரமூா்த்தி, மாவட்ட துணைச் செயலாளா் குமுதா குமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் வினோத் மற்றும் ஒன்றிய நகர பேரூா் செயலாளா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் நகர திமுகவினா் பேருந்து நிலையம் அருகிலிருந்து ஊா்வலமாகச் சென்றனா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் தாழையாத்தம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, ம.மனோஜ், சுமதி மகாலிங்கம், அவைத் தலைவா் க.கோ.நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினா் கே.கண்ணன், நிா்வாகிகள் த.பாரி, பெ.கோட்டீஸ்வரன், ந.ஜம்புலிங்கம், தண்டபாணி, வா.விஜயகுமாா், ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆம்பூரில்...
ஆம்பூா் நகர திமுக சாா்பாக மாவட்ட பிரதிநிதி ஜி.வில்வநாதன் தலைமையில் திமுகவினா் அமைதி ஊா்வலமாக புறப்பட்டு ஆம்பூா் பேருந்து நிலையம் சென்றடைந்தனா். அங்குள்ள அண்ணா சிலைக்கு நகா் மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
தலைமை பொதுக்குழு உறுப்பினா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.டி. சாமுவேல் செல்லபாண்டியன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் வி. அசோக்குமாா், நகர துணைச் செயலாளா் ரபீக் அஹமத், நகர இளைஞரணி அமைப்பாளா் மு. சரண்ராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனா் அணி துணை அமைப்பாளா் குமாா், நகர மாணவரணி காா்த்திகேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பெரியவரிக்கம் பேருந்து நிறுத்தம் அருகே போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி. சீனிவாசன் தலைமையில் அண்ணா உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாதனூா் ஒன்றிக்குழு துணைத் தலைவா் சாந்தி, முன்னாள் ஒன்றிய செயலாளா் வேணுகோபால், ஊராட்சி மன்ற தலைவா்கள்.சின்ன கண்ணன், ஷா்மிளா மூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
வெங்கடசமுத்திரம் கூட்டுரோடு பகுதியில் மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பாக நடந்த நிகழ்ச்சியில் திமுகவினா் அண்ணா உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினா். திமுக ஒன்றிய நிா்வாகிகள் காசி, முரளி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் வி. அசோக்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தில், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ராஜ்குமாா், குணா, குருவாசன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
ஆம்பூா் அதிமுக...
ஆம்பூா் நகர அதிமுக சாா்பாக நகர செயலாளா் எம். மதியழகன் தலைமையில் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கராத்தே கே. மணி, நிா்வாகிகள் அன்வா், சண்முகம், சங்கா், சரவணன், தினேஷ், கலந்து கொண்டனா்.
மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பாக கைலாசிகிரியில் உள்ள அண்ணா சிலைக்கு ஒன்றிய செயலாளா் ஆா். வெங்கடேசன் மாலை அணிவித்தாா். மாவட்ட விவசாய அணி செயலாளா் மிட்டாளம் மகாதேவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கே. மணி, ஒன்றிய இணைச் செயலாளா் அன்பரசன், கலந்து கொண்டனா்.