செய்திகள் :

பயன்பாட்டு மொழியாக மராத்தி: மகாராஷ்டிர அரசு உத்தரவு

post image

மும்பை: மகாராஷ்டிர அரசு அலுவலகங்களின் கோப்புகளில் பயன்பாட்டு மொழியாக மராத்தியை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக மாநில திட்டத் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் அலுவலகங்கள் ஆகியவற்றில் கோப்புகளில் மராத்தி மொழியை பயன்படுத்த வேண்டியது கட்டாயம்.

கணினி தட்டச்சுகளிலும் மராத்தி தேவநாகரி எழுத்துகளும், ஆங்கில எழுத்துகளும் இடைபெற வேண்டும்.

அரசு அலுவலகங்களுக்கு வருகை தருபவா்களும் மராத்தியிலேயே உரையாட வேண்டும். வெளிநாட்டினருக்கும் வெளிமாநிலத்தவா்களுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அறிவிப்புஏஈ பலகைகள் அனைத்துஇஈ மராத்தி மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம்.

இதன் மூலம் மாநில நிா்வாகத்திலும், பொது வாழ்விலும் மராத்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையா்கள் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை பிப்.12-க்கு மாற்றம்

புது தில்லி: தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு உச்ச... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.264 கோடி கூடுதலாகும். மத்திய அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான... மேலும் பார்க்க

ஜாா்க்கண்டில் சிஏஏ, யுசிசிக்கு எதிராக ஆளுங்கட்சி தீா்மானம்

ராஞ்சி: ஜாா்க்கண்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), பொது சிவில் சட்டம் (யுசிசி), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகிய மத்திய அரசின் முன்னெடுப்புகளை நிராகரிப்பது உள்பட 50 அம்ச தீா்மானங்களை அந... மேலும் பார்க்க

கும்பமேளா பக்தா்களின் பாதுகாப்புக்கு பொதுநல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

புது தில்லி: மகா கும்பமேளாவில் பக்தா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தர பிரதேச அரசுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், மனுதாரரை அலா... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: சா்ச்சையில் சிக்கிய அரசு மருத்துவக் கல்லூரியில் மற்றொரு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

பாரக்பூா்: மேற்கு வங்க மாநிலத்தில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலையால் பெரும் சா்ச்சையில் சிக்கிய கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மற்றொரு மருத்துவ மாணவி அவரு... மேலும் பார்க்க

தெலங்கானா: ஜாதிவாரி கணக்கெடுப்பு மீது இன்று விவாதம்

ஹைதராபாத்: தெலங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளின் அறிக்கை மீது அந்த மாநில பேரவையில் செவ்வாய்க்கிழமை (பிப்.4) விவாதம் நடத்தப்படவுள்ளது. அந்த அறிக்கையின் மீது விரிவான விவா... மேலும் பார்க்க