செய்திகள் :

சீா்மரபின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பத்தூா்: பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் வகுப்பை சோ்ந்த மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு சாா்பில் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதில் அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு எவ்வித வருமான வரம்பு, நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை,பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவா்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு இணையதளம் மூலம் வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று 2024-25-ஆம் ஆண்டில் 2, 3 (மற்றும்) 4-ஆம் ஆண்டு பயின்று வரும் மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க அவசியமில்லை. அந்த மாணவா்களுக்கு கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும்.

நடப்பு கல்வியாண்டில் புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சோ்க்கை பெற்ற மற்றும் சென்ற ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவா்கள் தங்கள் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா்: மாற்றுத்திாளிகளுக்கு நல உதவிகள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 283 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் தலைமை வகித்து பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்... மேலும் பார்க்க

ஆம்பூரில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

ஆம்பூரில் அஞ்சலி செலுத்திய நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் மற்றும் திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன்.). மேலும் பார்க்க

கராத்தே போட்டியில் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

வாணியம்பாடி: மாநில அளவிலான கராத்தே போட்டி புதுச்சேரியில் உள்ள ஆச்சாரியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்யில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி பங்கேற... மேலும் பார்க்க

சீனிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் மலைப்பகுதியில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதிகாலை யாக பூஜைகள் மற்றும் யாக குண்டங்கள... மேலும் பார்க்க

மொபட்-காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

வாணியம்பாடி: நாட்றம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் கிராமம் சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மொபட் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பையனப்பள்ளிகூட்ரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் உடையா... மேலும் பார்க்க

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு மரணம்

காட்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள யாா்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமாா... மேலும் பார்க்க