செய்திகள் :

விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா!

post image

விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா! மத் பாகவதம், சாதுர்மாஸ்ய விரத மகிமையைப் பற்றி விவரிக்கிறது. ஒரு முறை சந்நியாசிகள் கூடி, சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு இருந்தனர். அவர்களுக்குப் பணிவிடை செய்ய சிறுவன் ஒருவன் நியமிக்கப்பட்டான்.

விரத மகிமை

அவனுக்குத் தந்தை இல்லை; தாயார் மட்டுமே. சந்நியாசிகளுக்குப் பணிவிடை செய்வதில் மிகவும் ஊக்கமாக இருந்தான் அந்தச் சிறுவன்.

அவனிடம், சந்நியாசிகள் மிகுந்த கருணையோடு இருந்தனர். தாங்கள் உணவை அவனுக்குக் கொடுத்தனர். சிறுவன் மகிழ்ச்சியோடு அதைச் சாப்பிட்டான். சாதுர்மாஸ்ய விரதம் இருந்த சந்நியாசிகளது உணவால், சிறுவனுக்குத் தெளிவு பிறந்தது. சந்நியாசிகளின் விரதத்துக்கு தொந்தரவு ஏற்படாமல் அந்த சிறுவன் பார்த்துக் கொண்டான். அவர்கள் தேவை அறிந்து உதவினான்.

சந்நியாசிகள் அவ்வப்போது சொல்லும் பாகவதக் கதைகள் மற்றும் ஸ்தோத்திரங்களில் மனதைச் செலுத்தி பகவத் பக்தியில் சிறந்தவன் ஆனான். சிறுவனின் பணிவிடை மற்றும் அடக்கத்தால் உள்ளம் குளிர்ந்த சந்நியாசிகள், அவனுக்குத் தத்துவ ஞானம் உபதேசித்தனர். அதனால் சிறுவனுக்குப் பக்தியும் ஞானமும் அதிகரித்தன.

விரத காலம் முடிந்ததும், சந்நியாசிகள் அங்கிருந்து கிளம்பினர். மீண்டும் சிறுவன் தன் தாயாருடன் வசித்தான். ஒரு நாள் இரவு நேரத்தில் பால் கறக்கப் பசுவை நாடிப் போனாள் தாய். அப்போது, அவளை அறியாமல் ஒரு பாம்பை மிதித்து விட்டாள்; பாம்பு கடித்து அவள் இறந்தாள். இருந்த ஒரே ஒரு பந்தமும் மறைந்ததும் சிறுவன் வடதிசை நோக்கிக் கிளம்பினான்.

காட்டில் நீண்ட காலம் தவம் செய்து, இறைவன் அருள் பெற் றான். அந்தச் சிறுவன்தான் மறுபிறவியில், ‘நாரதர்’ எனும் திருநாமம் பெற்றான். நாரதரின் முற்பிறவிக் கதை இது. இந்தக் கதையை நாரதரே விவரித்திருக்கிறார்.

பிரம்மன் படைத்த ஒன்பது புதல்வர்களில் நாரதர் சிறந்து விளங்கக் காரணம் முற்பிறவியில் விரதம் இருந்தது மட்டுமல்ல, விரதத்துக்கு உதவியதும்தான் என்கிறது புராணம்.

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா; கொடியேற்றத்துடன் விமர்சையாகத் தொடங்கியது

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (ஜனவரி 31) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மீனாட்சியம்மன்திருவிழாக்களின் நகரமான மதுரை ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர சீரமைப்பு: `அதிசய மூலிகை ஓவியங்கள்’ - பக்தர்கள் வைக்கும் கோரிக்கை

மகா கும்பாபிஷேகம்முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணகான பக்தர்களும் விடுமுறை ... மேலும் பார்க்க

மருதமலை : ஆசியாவிலேயே பிரமாண்ட முருகன் சிலை - 160 அடி உயரத்தில் உருவாகும் கோவையின் புதிய அடையாளம்!

கோவை மருதமலை கோயிலுக்கு ஏப்ரல் 4-ம் தேதி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மருதமலை கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச... மேலும் பார்க்க

தோரணமலை தைப்பூசம்: 48 நாள்களுக்குள் நீங்கள் விரும்பியவாறே வாழ்க்கை மாற சங்கல்பியுங்கள்!

தோரணமலை தைப்பூசம்: 48 நாள்களுக்குள் நீங்கள் விரும்பியவாறே வாழ்க்கை மாற சங்கல்பியுங்கள்! 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ள... மேலும் பார்க்க

ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் தோரணமலையில் தைப்பூச சங்கல்ப விழா - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

தோரணமலை சங்கல்ப விழா: 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன. இங்கு முருகனை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் சகல நோய்களும் தீ... மேலும் பார்க்க

கும்பமேளா : உலகின் மிகப்பெரிய பக்தி திருவிழா... கோடிக்கணக்கில் கூடும் பக்தர்கள் | kumbh mela Album

மகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா க... மேலும் பார்க்க