செய்திகள் :

கடந்த 27 நாள்களில் 63 மீனவர்கள் கைது! மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

post image

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக உடனடி தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று (பிப். 3) கைது செய்தனர்.

இந்நிலையில் இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பிப். 2 அன்று மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகினையும் இன்று (பிப். 3) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 27 நாள்களில், 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 63 மீனவர்கள் மற்றும் 5 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 36 வெவ்வேறு சம்பவங்களில் 530 மீனவர்கள் மற்றும் 71 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இலங்கை சிறையிலுள்ள 97 மீனவர்களும், கைப்பற்றப்பட்டுள்ள 216 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து இதுபோன்று நடைபெற்று வருவது, இந்தச் சிக்கலான பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதும், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்காமல் இருப்பதும், கடலோரப் பகுதியில் வாழும் மீனவ சமுதாயத்தினருக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான தொடர் கைது நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்வதுடன், பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர்.

மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவதைநிறுத்தவும், இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும், உடனடியாக உயர்மட்ட தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆண்டவன் பெயரால் அரசியல் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு இன்று(பிப். 3) பேசியபோது, “திமுக ஆட்சி பொறுப்பேற்றது மு... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - முக்கிய குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலையத்துக்கு நேற்று(பிப். 2) நள்ளிரவு 12.00 மணியளவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை காவல் நிலையத்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் பிப்.5 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் ஆசிரியர்கள் மாலை 4.10 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் என... மேலும் பார்க்க

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி: அரசு அறிவிப்பு

சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் ஆகிய சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.பள்ளிப்படிப்புக்குப்பின் உ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரம் நிறைவு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று (பிப். 3) மாலையுடன் நிறைவு பெற்றது. மேலும் பார்க்க

தமிழகத்துக்கு 963 கி.மீ. 4 வழிச்சாலைகள்! புதிதாக 18 சுங்கச்சாவடிகள்!!

தமிழகத்தில் தற்போது 2,735 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகளின் அளவு விரைவில் 3,698 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு அதிகரிக்கப்போவதாகவும், அதுபோல சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கும் என்றம் தகவல... மேலும் பார்க்க