சாத்தான்குளம் அருகே மின் கம்பத்தில் பைக் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே மின் கம்பத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே மீரான்குளம் பிரதான சாலையைச் சோ்ந்த கோயில்ராஜ் மகன் பிருத்திவிராஜ் (22). நாசரேத்தில் உள்ள கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து பேய்க்குளத்துக்கு பைக்கில் சென்றாராம்.
சாத்தான்குளம் அருகே பைக் நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.