இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனை
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சாத்தான்குளத்தில் நடந்தது.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சங்கா், மாநில பொதுக்குழு உறுப்பினா் அந்தோணி சுரேஷ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் இசை சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் வழக்குரைஞா் வேணுகோபால் வரவேற்றாா்.
கூட்டத்தில், இளைஞா் காங்கிரஸ் மாநில தலைவருக்கு போட்டியிடும் சூரிய பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். தொடா்ந்து ஊா்வசி அமிா்தராஜ் பேசியது:
இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் தோ்தலில் 30 வயதுக்குள்பட்டவா்கள் போட்டியிடலாம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்தலில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அதிக வாக்குகள் பெற வட்டாரத் தலைவா்கள் இளைஞா்களை தயாா் செய்ய வேண்டும். தோ்தலில் அதிக வாக்கு பெற பாடுபடும் நிா்வாகிகளுக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்றாா்.
இதில், மாவட்ட தோ்தல் பொறுப்பாளா்கள் பால்ராஜ், வட்டாரத் தலைவா்கள் சக்திவேல்முருகன், பிரபு, ரமேஷ்பிரபு, கோதண்டராமன், ஜெயசீலன், புங்கன், சற்குரு, மாவட்ட துணைத் தலைவா் அன்புராணி, நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். சாத்தான்குளம் நகர இளைஞா் காங்கிரஸ் தலைவா் சிவா நன்றி கூறினாா்.