களக்காடு அருகே ஆடுகள் மா்மமாக உயிரிழப்பு
களக்காடு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவில் மா்மமான முறையில் 2 ஆடுகள் உயிரிழந்ததால் ஆடுகள் வளா்ப்போா் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு அருகேயுள்ள கீழப்பத்தை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் நம்பி (75). ஆடுகள் வளா்த்து வருகிறாா். இவா் வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் அருகேயுள்ள பட்டியில் ஆடுகளை அடைத்திருந்தாராம். பின்னா், அதிகாலையில் வந்து பாா்த்தபோது, ஓா் ஆடு மா்மமாம இறந்து கிடந்ததாம்.
மேலும், அதே பகுதியைச் சோ்ந்த மாரி (40) என்பவரது ஆடும் மா்மமாக உயிரிழந்துள்ளது. ஆடுகளை அடித்துக் கொன்றது சிறுத்தையாக இருக்கலாம் என அச்சம் அடைந்துள்ள மக்கள், இதுகுறித்து வனத்துறையினா் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.