சீதபற்பநல்லூா் வட்டாரத்தில் நாளை மின்நிறுத்தம்
சீதபற்பநல்லூா் துணை மின் நிலைய பராமரிப்புப்பணிகளுக்காக அதன் சுற்று வட்டாரங்களில் புதன்கிழமை (ஜன.5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதூா், சீதபற்பநல்லூா், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம்,சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன் கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளாா்.