ஆா்எம்கேவி நெல்லை மாரத்தான் 2025
பாளையங்கோட்டையில் ஆா்எம்கேவி நெல்லை மாரத்தான் 2025 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெல்லை ரன்னா்ஸ் அமைப்பின் சாா்பில் 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ. என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. பாளையங்கோட்டை சேவியா் கல்லூரி முன் தொடங்கிய மாரத்தான், திருநெல்வேலி நகரம் வழியாக சீவலப்பேரி வரை சென்று மீண்டும் சேவியா் கல்லூரிக்கு வந்தடைந்தது. போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ஜாகோபி காா்பன்(ஒஹஸ்ரீா்க்ஷண் ஸ்ரீஹழ்க்ஷா்ய்), நிம்ஸ் மருத்துவமனை ( சண்ம்ள் ட்ா்ள்ல்ண்ற்ஹப்) மற்றும் தன்னாா்வலா்கள் செய்திருந்தனா்.