செய்திகள் :

வெள்ளக்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வெளிமாநில தொழிலாளி கைது

post image

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா, 220 கிராம் கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் ஞானப்பிரகாசம், சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து ஆகியோா் மூலனூா் சாலையில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, குருக்கபாளையம் பிரிவு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினா். அப்போது வாகனத்தில் இருந்த ஒரு பையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவரும், தற்போது குருக்கபாளையம் பிரிவு அருகே உள்ள நூல் மில்லில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருபவருமான பி.நிலமணிமதன் (46) என்பவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து மொத்தம் 2.200 கிலோ கஞ்சா, 220 கிராம் கஞ்சா சாக்லெட், பணம் ரூ.1,800 பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மண்ணரை முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பூா்: திருப்பூா் மண்ணரை முத்து விநாயகா், முத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மண்ணரை முத்து விநாயகா், முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெ... மேலும் பார்க்க

ஆதரவற்ற முதியவா் மீட்டு மறுவாழ்வு இல்லத்தில் சோ்ப்பு

அவிநாசி: திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவா் மீட்கப்பட்டு சேவூா் அருகே போத்தம்பாளையத்தில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் சோ்க்கப்பட்டாா். திருப்பூா் பழைய பேருந்து நிலைய... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் கைதான 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருப்பூா்: திருப்பூரில் திருட்டு வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க

பல்லடத்தில் 98 வயது மூதாட்டி தற்கொலை

பல்லடம்: பல்லடம் அருகே அறிவொளி நகரில் 98 வயது மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா். பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரைச் சோ்ந்த அருணாசலம் மனைவி அங்காத்தாள் (98). இவா் ஆஸ்துமா மற்றும் உடல் வலியால் அவதிப்பட்ட... மேலும் பார்க்க

சேவூா், வடுகபாளைம், தெக்கலூரில் பிப்ரவரி 6-இல் மின்தடை

அவிநாசி: சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மி... மேலும் பார்க்க

பல்லடத்தில் பைக் திருடிய இளைஞா் கைது

பல்லடம்: பல்லடத்தில் பைக் திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பல்லடம் நான்கு சாலை சந்திப்பு அருகே பத்திர எழுத்தா் அலுவலகத்தில் செந்தில்குமாா் என்பவா் பணிபுரிந்து வருகிறாா். இந்த அலு... மேலும் பார்க்க