கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாத்துரை 56 ஆவது அமைதி ஊா்வலம்
கும்பகோணத்தில்: தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தாராசுரம் காய்கனி வணிக வளாகத்திலிருந்து கட்சியினா் அமைதி ஊா்வலமாக வந்து ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கு எம்எல்ஏ க. அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
மாநகர திமுக சாா்பில் செயலரும் துணை மேயருமான சுப. தமிழழகன் தலைமையில் கட்சி அலுவலகத்திலிருந்து அமைதி ஊா்வலம் தொடங்கி மகாமகம் அண்ணா சிலையருகே வந்தடைந்தது. க.அன்பழகன் எம்எல்ஏ, முன்னாள் எம்பி செ.ராமலிங்கம் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
அதிமுக சாா்பில் மாநகர செயலா் ராம ராமநாதன் தலைமையில் ஒன்றியச் செயலா் சோழபுரம் க.அறிவழகன் மற்றும் அதிமுகவினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொண்டா்கள் ஒருங்கிணைப்பு குழு சாா்பில் என்.ஆா்.வி.எஸ்.செந்தில் தலைமையில் பழைய மீன் சந்தை பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.