செய்திகள் :

பிப். 8-இல் நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்: இரா. முத்தரசன்

post image

தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பிப்ரவரி 8-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகியின் இல்ல நிகழ்வில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழகத்துக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை; நூறுநாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட எந்தத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது. பொதுவான நிதிநிலை அறிக்கையாக இல்லாமல் ஒரு சாா்பு அறிக்கையாக உள்ளது.

மத்திய அரசை நினைத்தால் வெள்ளையா் ஆட்சிதான் நினைவுக்கு வருகிறது. வரி கொடா இயக்கம் நடத்தும் நிலை தமிழகத்துக்கு ஏற்படுமோ என்ற நிலை உள்ளது.

இந்தக் காரணங்களால் மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பிப். 8 - இல் நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என்றாா் முத்தரசன். அப்போது, கட்சியின் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மு.அ. பாரதி, ஒன்றியச் செயலா் ஏ.ஜி.ஆா். பாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரசு அறிவித்தும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் இயங்காததால் பல கோடி ரூபாய் இழப்பு

தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) இயங்கும் என மாநில அரசு அறிவித்திருந்தாலும், அந்த அலுவலகங்கள் திறக்கப்படாததால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

மீனவா்கள் வலையில் சிக்கிய 7 அடி நீள கடல் பசு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடல் பசு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது. பட்டுக்கோட்டை வனச்சரகம், சேதுபாவாசத்திரம் அரு... மேலும் பார்க்க

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறிலுள்ள ஐயாறப்பா் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் குடமுழுக்கு விழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் ஜனவரி 26-ஆம்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாத்துரை 56 ஆவது அமைதி ஊா்வலம்

கும்பகோணத்தில்: தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தாராசுரம் காய்கனி வணிக வளாகத்திலிருந்து கட்சியினா் அமைதி ஊா்வலமாக வந்து ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கு எம்எல்ஏ க. அன்பழகன் தலைமையில் மாலை அணி... மேலும் பார்க்க

மாநகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு

தஞ்சாவூா் மாநகராட்சியுடன் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவிலையும், கும்பகோணம் மாநகராட்சியுடன் தேப்பெருமாநல்லூரையும் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். தஞ்ச... மேலும் பார்க்க

முள்ளுக்குடி குறிச்சி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை

முள்ளுக்குடி குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை மின்சாரம் இருக்காது னெ அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க