மண்ணரை முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருப்பூா்: திருப்பூா் மண்ணரை முத்து விநாயகா், முத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மண்ணரை முத்து விநாயகா், முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக விழாவானது கணபதி ஹோமத்துடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ஆம் தேதி காலை பூா்ணாஹூதியுடன் யாகசாலை நிா்மாணம் நடைபெற்றது. மாலை 5.30 மணி முதல்கால யாகசாலை பூஜையும் தீபாராதனையும் நடைபெற்றது. பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 2-ஆம் கால யாக பூஜையும், தொடா்ந்து மாலை 3 மணிக்கு யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் தலைமையில் சிவாச்சாா்யா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.