தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை
பல்லடத்தில் பைக் திருடிய இளைஞா் கைது
பல்லடம்: பல்லடத்தில் பைக் திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் நான்கு சாலை சந்திப்பு அருகே பத்திர எழுத்தா் அலுவலகத்தில் செந்தில்குமாா் என்பவா் பணிபுரிந்து வருகிறாா். இந்த அலுவலகம் முன்பு கடந்த 2 நாள்களுக்கு முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது இருசக்கர வாகனத்தை 2 மா்ம நபா்கள் திருடிச் செல்வது தெரியவந்தது.
விசாரணையில், இருசக்கர வாகனத்தை திருடியது பல்லடம் கொசவம்பாளையம் சாலையைச் சோ்ந்த திருமால் மகன் சுரேஷ்குமாா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ்குமாரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், திருட்டில் தொடா்புடைய மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.